இனவரைவியல் உலகளவில் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இந்தியாவில் ஜரோப்பியர் வரவால் 1770ல் தோற்றம் பெற்றது இனக்குழுவியல். 50 ஆண்டுகளுக்குப் பிறகே ஆர்வமுடையவர்களாலும், சமயத்தைப் பரப்புவதற்கு முயன்றவர்களாலும் வாய்மொழியாக வழங்கப்பட்ட இனவரைவியல் செய்திகள் எழுந்து வடிவம் பெற்றது. “கார்பினி என்பவர் மங்கோலியர்களின் வரலாறு” எனும் நூலில் மங்கோலியர்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் குறித்து எழுதியுள்ளார். இவ்வாறு ஆர்வாலர்களால் இனவரைவியல் ஆராயப்பட்டது. “1901 ஆம் ஆண்டு மனித இனவியல் ஆய்வினை இந்தியா முழுவதும் விரிவாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதன் மூலம் 1901-ல் இனவரைவியல் குறித்த சிந்தனை முக்கியத்துவம் பெற்றதை அறியலாம். தழிழகத்தில் துரை அரங்கசாமி எழுதிய சங்ககாலச் சிறப்புப் பெயர்கள் எனும் நூலில் சங்ககாலங்களில் வாழ்ந்த இனக்குழுவினரின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தவத்சல பாரதியின் பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் நூல்களில் மானிடவியல் பற்றிய செய்திகளும், இனவவரைவியல் பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. அரு.பரமசிவத்தின் தென்னிந்திய இன ஒப்புமையியல் நூலில் கள்ளர், பறையர், இடையர், ரெட்டியர், முதுவர் போன்ற இனங்களைப் பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்நூல்கள் இனவரைவியல் பற்றி தமிழில் வெளிவந்த ஆய்வுகள் ஆகும். இவ்வாறு இனவரைவியல் பற்றிய பல்வேறு ஆய்வு விபரங்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டு உள்ளது.